மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம் மற்றும் டிமாண்ட் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொழில் முனைவோர் மின் கட்டணம் குறைப்பு மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தியில் கட்டண விலக்கு கோரினர்.


Coimbatore: தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுடன் தொழில் துறையினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி அவிநாசி சாலை, லட்சுமி மில் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நடந்தது.



தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் பேசும்போது,மின் கட்டணத்தை செலுத்துவதற்கு தொழில் முனைவோர் தயாராக இருக்கிறோம். ஆனால் நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் உள்ளிட்ட 12 வகை இதர கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்.10 போட்டி மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் அதிகம். தவிர பிற மாநிலங்களில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டு தொழில் துறையினருக்கு இலவசங்கள் வேண்டாம். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும். மின் கணக்கீட்டு மீட்டர் பொருத்தப்படும் வரை பீக் ஹவர் மின் கட்டணம் வசூலிக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதை நிரந்தரமாக நீக்க வேண்டும். அதேபோல் சூரிய ஒளி காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செய்து உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு அவற்றை எடுத்து வரும் தொழில் முனைவரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. தமிழ்நாட்டில் இத்தகைய துறைகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்து அவற்றை விற்பனை செய்யும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். மேற்கூரை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு(Roof Top Solar)விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணம் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.



தமிழ்நாட்டில் உற்பத்தி துறை சார்ந்த தொழில் முனைவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது தொழில் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

தமிழ்நாட்டில் தொழில்துறை சார்ந்த எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் குறு, சிறு தொழில் துறையினரை அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டு திட்டங்களை அறிவித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிபேசும்போது, மின்சாரத்துறை சார்ந்த மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தேர்தல் வெற்றிக்கு பின் விரைந்து அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.என்றார்.

கோவை வடக்கு திமுக வேட்பாளர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட கட்சியை நிர்வாகிகள் மற்றும்

பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...