கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore:

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குட்டையில் கார் ஒன்று மூழ்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று இந்த பகுதியில் கார் ஒன்று குட்டையில் மூழ்கி கிடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

தீயணைப்பு துறையினரின் உதவியுடன் காரை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது காருக்குள் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் உயிரிழந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து, இளைஞரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபரின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், இரவில் வேகமாக சென்ற கார் வழி தவறி சாலை ஓரத்தில் இருந்த குட்டைக்குள் பாய்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் கவனம் ஈர்த்துள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...