தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை (TNDGE) சார்பில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பி. சந்திரமோகன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இந்த ஆண்டு மாநில அளவில் 95.20 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



கடந்த ஆண்டின் 95.03 சதவீத தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு சற்று அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 7,91,654 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 4.1 லட்சம் மாணவிகளும், 3.7 லட்சம் மாணவர்களும் அடங்குவர்.

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.



மாநிலம் முழுவதும் உள்ள 7,536 பள்ளிகளில் 2,639 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதில், 489 அரசு பள்ளிகளும் அடங்கும். தனியார் பள்ளிகள் 98.72 சதவீத தேர்ச்சியுடன் முன்னிலை வகித்துள்ள நிலையில், அரசு பள்ளிகள் 92.16 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.14 சதவீதமும் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு 16,024 மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் முழு மதிப்பெண்எடுத்துள்ளனர். அதில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 6,945 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ்ப்பாடத்தில் 83 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

மேலும், பிளஸ் 1 பொதுத்தேர்வு நீக்கப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட அரியர் தேர்வில் 20,444 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 8,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி tnresults.nic.in (http://tnresults.nic.in/), (http://tnresults.nic.in/) dge.tn.gov.in (http://dge.tn.gov.in/) மற்றும் DigiLocker தளங்களில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே, மாணவ - மாணவிகள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதற்காக கல்லூரிகளில் குவிந்தனர். குறிப்பாக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் மற்றும் முன்பதிவு பணிகள் இன்று முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலுடன் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுடன் கல்லூரிகளுக்கு நேரில் வந்து, விருப்பமான பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பான தகவல்களை அறிந்து பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக பி.காம் (B.Com (http://b.com/)), பி.எஸ்சி ஐ.டி (B.Sc IT), கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்ப பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் பல கல்லூரிகளில் பிரத்யேக உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கு ஏற்ப எந்தப் பாடப்பிரிவு அவர்களுக்கு ஏற்றது, எதிர்கால வேலைவாய்ப்பு வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது குறித்து கல்வி ஆலோசகர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளில் குவிந்து வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...