PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தி திணிப்பு மற்றும் BJP ஊடுருவல் முயற்சி என்று குற்றம் சாட்டி புதிய அரசு திட்டத்தை ஏற்கக் கூடாது என வலியுறுத்தினர்.


Coimbatore: மத்திய அரசின் PM Shri திட்டத்தை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள BSNL அலுவலகம் முன்பு 30க்கும் மேற்பட்ட கழகத்தினர் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அரசு நாடு முழுவதும் 14,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து நவீன வசதிகளை கொண்டுவரும் வகையில் PM Shri திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்றும், இது இந்தி மொழியை திணிக்கும் செயல் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு தற்போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற கழகத்தினர், இந்த திட்டம் இந்தி மொழியை திணிக்கும் செயல் என்றும், மறைமுகமாக BJP ஊடுருவ முயற்சிக்கும் செயல் என்றும் தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்க உள்ள மாநில அரசும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினர்.

இது குறித்து பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், "இந்த திட்டம் மறைமுகமாக BJP தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் செயல். இது இந்தியை திணிக்கும் செயல். புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது. திராவிட முன்னேற்ற கழகம் எவ்வாறு இந்த திட்டத்தை எதிர்த்து போராடியதோ அதுபோலவே எதிர்த்து இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது" என வலியுறுत்தினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...