கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வீரகேரளம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். ஏணியை துண்டாக்குவதற்காக தண்டவாளத்தில் வைத்ததாக விசாரணையில் தெரியவந்தது.


Coimbatore: கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த விவகாரத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். பழைய இரும்பு சேகரிப்பு தொழில் செய்யும் இவர்கள் ஏணியை துண்டாக்குவதற்காக இவ்வாறு செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த மே 9ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில், கோவை வடக்கு மற்றும் பீளமேடு இடையே வந்த அதிவிரைவு ரயில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமினிய ஏணி மீது மோதியது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினர் சேதமடைந்த ஏணியை அப்புறப்படுத்திய பின்னர், ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சொத்துகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இருவரது உருவம் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ரத்தினபுரி ரயில்வே மேம்பாலப் பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பாலத்தின் அடியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்த வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35), காரமடை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (45) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இவர்களின் உருவம் ஒத்துப்போனது தெரியவந்தது. விசாரணையில், மது பாட்டில்கள் மற்றும் பழைய இரும்புப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் இவர்கள், கடந்த 9ஆம் தேதி ஒரு அலுமினிய ஏணியை பழைய இரும்புக் கடையில் விற்க முயன்றதாக தெரியவந்தது.

ஆனால், கடைக்காரர் அதை முழுமையாக வாங்க மறுத்து, துண்டுகளாக வெட்டி வருமாறு கூறியுள்ளார். ஏணியை துண்டாக்குவதற்காக எளிதான வழியைத் தேடிய இவர்கள், தண்டவாளத்தில் வைத்து ரயில் ஏறி அது உடையட்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...