காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.


Coimbatore: காரமடையை அடுத்த சீளியூர் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜண்ணன் என்பவரின் விவசாய நிலத்தில் 60 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் சுமார் 10 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பியிருந்தது.



நேற்று முன்தினம் மாலை தோட்டப்பணிகளை முடித்து வீட்டிற்கு சென்ற ராஜண்ணன், மறுநாள் காலை தோட்டத்திற்கு வந்தபோது கிணற்றிலிருந்து விலங்குகள் ஓலமிடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த போது, தாய் மற்றும் குட்டி என இரண்டு காட்டுப்பன்றிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர் காரமடை வனத்துறையினருக்கும் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் அனில் குமார் மற்றும் காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், கிணற்றுக்குள் இறங்கி காட்டுப்பன்றிகளை மீட்க முயன்றனர்.

காட்டுப்பன்றிகள் தாக்கக்கூடும் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வலை விரித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவற்றை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...