மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.


Coimbatore: மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உள்ள காந்தி மைதானம் பகுதியில் நூற்றுக்கணக்கான தனியார் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.



நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லாரிகள் மூலம் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகிறது.

இதனால், வாரத்தின் பெரும்பாலான நாட்களில் லோடுகளை இறக்குவதற்காக வரும் கனரக லாரிகள் சாலையோரங்களில் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த சாலையின் வழியாகவே தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், நெல்லித்துறை, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவசர மருத்துவ உதவிக்காக வரும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும் லாரி டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் அது கைகலப்பாக மாறுவதாகவும் கூறப்படுகிறது.

லாரிகளை முறையாக சாலையோரத்தில் நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டும், சிலர் காவல்துறை உத்தரவுகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். எனவே, தொடர் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...