கோவையில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி திருமுகச்சிலை கின்னஸ் விருது

தமிழகத்தின் கோவையில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி திருமுகச்சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை என்று  கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

இதை பற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகம் கூறுவதாவது: 

"உலகிலேயே மிகப்பெரிய மார்பளவுச் சிலையின் அளவு - உயரம் 34.24 மீட்டர் 112 அடி 4 அங்குலம், அகலம் 24.99 மீட்டர் 81 அடி 11.8 அங்குலம், நீளம் 44.9 மீட்டர் 147 அடி 3.7 அங்குலம். இந்த சாதனையை தமிழ்நாட்டின் ஈஷா அறக்கட்டளை செய்ததாக 11 மார்ச் 2017 அன்று உறுதி செய்கிறோம்."

இந்த சாதனை ஈஷாவிற்குகிடைத்துள்ள இரண்டாவது கின்னஸ் சாதனை விருதாகும். ஏற்கனவே ஈஷா அறக்கட்டளை அக்டோபர் 17 2006 அன்று 852,587 மரக்கன்றுகளை, தமிழ்நாட்டில் நட்டதற்காக கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் திருமுகச்சிலையை வடிவமைக்க 2.5 ஆண்டுகள்ஆனதாகவும், அதை நிர்மாணிக்க 8 மாதங்கள் மட்டுமே ஆனதாகவும், அதற்கு காரணம் இதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டார்களின் அர்ப்பணிப்புதான் என்றும் ஈஷாவின் நிறுவனர் சத்குரு இச்சிலை திறப்பின் போது கூறியிருந்தார்.

மக்களுக்கு ஊக்கம் ஊட்டிடும் ஒரு பிரம்மாண்ட அடையாளம் தான் இந்த முகம். மனிதர்கள் தன்னிலை மாற்றத்தை கொண்டு வரவிரும்பினால், அதற்கான தீர்வை தங்களுக்குள்ளேயே தேடி உணர்ந்திட ஆதியோகி ஒரு அடையாளமாக, குறியீடாக இருந்து ஊக்குவித்திட அமைந்துள்ளார். முதல் யோகியான ஆதியோகி, மனிதனின் தன்னிலை மாற்றத்திற்கான 112 வழிமுறைகளை வழங்கினார். அதன் குறியீடாகவே 112 அடி உயரச்சிலை அமைந்துள்ளது.

யோகபாரம்பரியத்தில் சிவனையோக விஞ்ஞானத்தின் மூலமான முதல் யோகியாக குருவாக பார்க்கின்றனர். இதை போன்று மேலும் மூன்று 112 அடி முகங்கள் இந்தியாவின் மூன்று மூலைகளில் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...