கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மேல்மாடியில் வசித்த குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்த போலீசார் உடுமலையை சேர்ந்த சூர்யாவை கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Coimbatore: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவரது மகன் ஜெகதீஷ். ஜெகதீஷின் வீட்டின் கீழ்தளத்தில் அவரது தாயார் வசித்து வந்தார். மேல்தளத்தில் ஜெகதீஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று ஜெகதீஷின் தாயார் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் சென்றிருந்தார். பின்னர் ஜெகதீஷ் இரவு 11 மணியளவில் தூங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வீட்டு கதவை உடைக்கும் சத்தம் கேட்டதால் ஜெகதீஷ் கீழே சென்று பார்த்துள்ளார். அப்போது தாயார் தங்கி இருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகைகள், சில்வர் பொருட்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

உடனடியாக ஜெகதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் தப்பியோட முயன்றனர். இதில் ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கினான். இது குறித்து ஜெகதீஷ் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...