மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.


கோவை: கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள உயர்ரக போதைப்பொருளை கடத்திய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கமான சோதனை நடத்தினர். சோதனையின்போது எக்சிம் கிங்ஸ்லி வைத்திருந்த பையில் இருந்து 2 கிலோ 235 கிராம் மெத்தாம்பேட்டமைன் என்ற உயர்ரக போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு கோடி கணக்கான ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.




இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் NDPS சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து எக்சிம் கிங்ஸ்லியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை கோவை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.




வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், அரசுத் தரப்பு வாதங்களையும், சாட்சியங்களையும் ஆய்வு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கண்டறிந்தார். அதன்படி நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லிக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.




இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ஆஜராகி வாதாடி வெற்றி பெற்றார். இந்த தீர்ப்பு போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...