கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 230 அடியார்கள் பயிற்சி பெற்றனர். சைவத்திரு குமரலிங்கம் தலைமையில் பன்னிரு திருமுறை, சமய தீக்கை மற்றும் சடங்கு முறைகள் பற்றிய விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழக பன்னிரு திருமுறை ஆய்வுமையத்தின் வாயிலாக மே 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாள்களில் தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. கோவை மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளையின் செயலாளர் சைவத்திரு ப. குமரலிங்கம் தலைமையில் இப்பயிற்சி வழங்கப்பட்டது.



பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr இராச. வசந்தகுமார் 'மேன்மை கொள் சைவ நீதி விளங்குக!' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். "திருமுறைகளை உள்ளன்புடன் ஓதுவதே உயிர் உய்வதற்கான பயிற்சியாக அமையும். குருநாதரின் அருளுபதேசமும், தன்னலத்தை மறந்து அடியார்களுக்குத் தொண்டு செய்வதும் சிவத்தைச் சார்கின்ற பக்திநெறி" என்பதை தமது உரையில் வலியுறுத்தினார்.



அறிஞர்களால் தமிழ்நெறி வழிபாட்டின் சிறப்பு, பன்னிரு திருமுறை வரலாறு, மெய்கண்ட சாத்திரங்கள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளில் கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன. அருள் குருநாதர் சைவத்திரு ஒளியரசு அடியார்களுக்கு சமய தீக்கை செய்வித்தார். சைவ அனுட்டான செயல்முறை விளக்கமும், திருமுறைகளை ஓதி வாழ்வியல் சடங்குகளை நிகழ்த்துவதற்கான பயிற்சிகளும் அடியார்களுக்கு வழங்கப்பட்டன.

நிறைவு விழாவில் சைவத்திரு பொறியாளர் முத்துசாமி தமிழ் நெறி வழிபாட்டின் சிறப்பினை விளக்கி, அடியார்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பயிற்சி வகுப்பில் சிறந்த பங்களிப்புக்காக இலண்டனிலிருந்து வந்த அடியார்கள் சைவத்திரு காமராஜ் மற்றும் சைவத்திரு பாலமுரளி கிருஷ்ணா ஆகியோர் பாராட்டுப் பெற்றனர்.

மூன்று நாள் பயிற்சி வகுப்பின் வாயிலாக 230 அடியார்கள் தமிழ் வழிபாட்டு நெறிமுறையை முழுமையாக அறிந்து பயன்பெற்றனர். இப்பயிற்சி வகுப்பு தமிழ் வழிபாட்டு முறைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...