கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள், சுடுமண் பொருட்கள், அகல்விளக்கு உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவப்பட்டி அருகே உள்ள மோளப்பாளையத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட தொல்லியல் அகழாய்வில், இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.




தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கேரள மாநிலத்தின் ஆலுவா யு.சி. கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுள்ள இந்த அகழாய்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முனைவர் வீ. செல்வகுமார் தலைமையில் ஏப்ரல் 18 முதல் நடைபெற்று வரும் இந்த அகழாய்வில், முதுகலை வரலாறு மற்றும் தொல்லியல் மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் தொடர்ச்சியாக தற்போது மூன்றாம் கட்ட ஆய்வு நடைபெறுகிறது.






அகழாய்வில் தாழி வடிவிலான குழி வீடுகள், பல்வேறு வகையான குழிகள், குச்சி நடுகுழிகள், மெருகேற்றப்பட்ட பானை ஓடுகள், புதிய கற்கால கருவிகள், அம்மிக்கற்கள், தானியச் சான்றுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. மேலும், குழிகளின் சுற்றுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குச்சி நடுகுழிகள், அக்கால மக்களின் குடியிருப்பு அமைப்புகளை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.






இதனுடன், கடற்சங்குகளால் செய்யப்பட்ட பல்வேறு வகை மணிகள், சுடுமண் பொருட்கள், அகல்விளக்கு மற்றும் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. குறிப்பாக இரண்டு முதல் மூன்று வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






மேலும், ஆடு, மாடு, மான், ஆமை உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகளும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மேலாய்விற்காக அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




கரியமிலக் காலக்கணிப்பு ஆய்வுகளின் அடிப்படையில், இந்த புதிய கற்கால வாழ்விடம் பொ.ஆ.மு. 1600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...