கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 49 மனுக்கள் பெறப்பட்டன.

Coimbatore:

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் மொத்தம் 49 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பெறப்பட்ட மனுக்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும், மாநகராட்சி பிரதான அலுவலகத்திலும் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர்கள் த. குமரேசன், ர. சரஸ்வதி, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் மரு. வீ.சி. சுபாஷ் காந்தி, நகரமைப்பு அலுவலர் ந. தாமோதரன், மாநகர கல்வி அலுவலர் குணசேகரன், உதவி ஆணையாளர்கள் நர்மதா (மேற்கு), சண்முகம் (மத்தியம்), தட்சிணாமூர்த்தி (தெற்கு), தட்சிணாமூர்த்தி (கிழக்கு), செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...