சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.


Coimbatore:

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு சரவணம்பட்டி காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று நின்றிருந்த, பதிவு எண் இல்லாத மற்றும் சேஸ் எண்கள் தெளிவாக இல்லாத சுமார் 73 இருசக்கர வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் தொடர்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் கீழ் பிரிவு 106-ன் படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கையகப்படுத்தப்பட்ட வாகனங்களில் சிலவற்றை பொதுமக்கள் தவறுதலாக நிறுத்திவிட்டு சென்றிருக்கலாம் அல்லது காணாமல் போன வாகனங்களாக இருக்கக்கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த வாகனங்கள் தங்களுடையது என கருதும் பொதுமக்கள் உரிய ஆவணங்கள் மற்றும் அடையாளச் சான்றுகளுடன் சரவணம்பட்டி காவல் நிலையத்தை அணுகி வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் விரைவாக காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தேவையான நடைமுறைகளை பூர்த்தி செய்து வாகனங்களை மீட்டுக்கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...