தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை அறிக்கை தயாரித்துள்ளது.

Coimbatore:

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர நகை உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான மூலதன நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, தங்க விலை உயர்வால் நகை உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

நிர்வாகிகள் கூறுகையில், எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை உற்பத்தியாளர்கள் மூலதன பற்றாக்குறை மற்றும் நிதிச் சுமையை சந்தித்து வருகின்றனர். கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கும் வரி விதிக்கப்படுவது தொழில்துறைக்கு கூடுதல் சுமையாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கருத்தில் கொண்டு, மாற்றீடு முறையை அறிமுகப்படுத்துதல், உள்நாட்டு விற்பனைக்கான ஏற்றுமதி விலைப்பட்டியல் முறையை அமல்படுத்துதல், கையிருப்பு மதிப்பு உயர்வை தனி கையிருப்பு கணக்கில் வரவு வைக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மேலும், ICDS விதிகளில் சிறப்பு சலுகைகள் வழங்குதல், குறு மற்றும் சிறு நகை உற்பத்தியாளர்களுக்கு ஊக அடிப்படையிலான வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் சரக்கு மதிப்பீட்டிற்கு LIFO முறையை அனுமதித்தல் போன்ற பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முத்துவெங்கட்ராம், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 140 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது FIFO மற்றும் Weighted Average Method முறைகளின் அடிப்படையில்தான் வருமான வரி தாக்கல் செய்ய முடிவதாகவும், இதனால் பல தொழில்முனைவோர் தங்களது மூலதனத்தையே பயன்படுத்தி வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே, நகை உற்பத்தித் துறையின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரிச்சட்டங்களில் தேவையான மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், சங்கம் தயாரித்துள்ள கோரிக்கை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் மற்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...