விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னியம்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு திட்டம் தயார் செய்யப்பட்டது. அதன்படி, 600 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தனர். இதில், 150 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் உள்ளது. ஏனைய 450 ஏக்கர் நிலமும் அப்பகுதியில் குடியிருக்கும் சாதாரண மக்களிடமிருந்து கையகப்படுத்துவது என முடிவு செய்தனர்.



இத்திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்த போதிலிருந்தே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். தொடர்ந்து, கையகப்படுத்துவதை நிறுத்த முடியாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.

இதைத்தொடர்ந்து, கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை விலை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க துவங்கினர். ஆனால், அதையும் மத்திய, மாநில அரசுகள் பொருட்படுத்தவில்லை.

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு சாதகமாக வந்தது. அதில், சந்தை விலையோ அல்லது, 2013-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையும், மாநில அரசு அமல்படுத்த தயங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இன்று சின்னியம்பாளையம் ஊராட்சி 4-வது வார்டு பொதுமக்கள் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் 150 வீடுகளும், 30 தொழிற்சாலைகளும் உள்ளன. இதனால் 3 ஆயிரம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். 

மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 60 லட்சம் ரூபாய் மற்றும் கூடுதலாக 30 லட்சம் என மொத்தம் 90 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்தனர். ஆனால், தற்போது 15 முதல் 30 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போதைய சந்தை விலையே ஒரு சென்ட் 10 லட்சம் வரை செல்லும் போது அரசு அறிவித்துள்ள தொகை ஏமாற்றம் அளிக்கிறது.

இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மேலும், எங்களது பகுதிக்கு விரைவில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...