சிவானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு


கோவை சிவானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை (எண்: 1531) அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அன்னை கஸ்தூரிபா மகளிர் நுகர்வோர் அமைப்பு அளித்துள்ள மனுவில், குடியிருப்புகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் நிறைந்த பகுதி கோவை சிவானந்தா காலனி. இப்பகுதியில் பல வருடங்களாக டாஸ்மாக் கடை (எண்: 1531) செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு வரும் மது பிரியர்கள் குடித்துவிட்டு சாலையில் செல்லும் பெண்களை இழிவாக பேசி வருகின்றனர். மேலும், இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள சாலையைக் கடந்தே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் செல்ல வேண்டியுள்ளதால் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

மேலும், சாலையோரம் நிற்கும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அமர்ந்தும் மது அருந்தி வருகின்றனர். இதனால், பெண்கள் வெளியில் செல்வே முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் இருந்தபோது மனு அளித்தோம். மனு குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அப்போதைய ஆட்சியர் உறுதியளித்தார். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து பல முறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. 

கோவை மாவட்ட அட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...