நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அளவீடு செய்து ஒப்படைக்கப்படாததால், சொந்த இடத்தில் குடியேற முடியாமல் வாடகை வீடுகளில் வசித்து வருவதாக 330 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மூர்த்தி ரெட்டிபாளையம், சகாயபுரம், நெய்க்காரம்பாளையம், பெரியார் நகர், சத்யா நகர், சாம்பவலசு, கோட்டை மாநகர், கள்ளிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 330 குடும்பங்களுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீரணம்பாளையம் கிராமத்தில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.



ஆனால், பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தும் இதுவரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்து ஒப்படைக்கவில்லை என பயனாளிகள் குற்றம்சாட்டினர். இதனால், பட்டா பெற்ற பின்னரும் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் குடியேற முடியாமல், வாடகை வீடுகளில் வசித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே, தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை நிலங்களை உடனடியாக அளவீடு செய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, பட்டா பெற்ற பயனாளிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...