40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வீடு கட்டி குடியிருப்போருக்கு கட்டணமின்றி பட்டா வழங்கி நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.கந்தசாமி மனு அளித்தார்.


கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வீடு கட்டி குடியிருப்போரின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் (ஜாதி, மதம், கட்சி சார்பற்ற) சார்பில் மாநில பொதுச் செயலாளர் P. கந்தசாமி , கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.

மனுவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மக்களின் வீட்டு வசதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட அரசு அமைப்பாக இருந்தாலும், கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆர்ஜிதம் செய்ய முன்மொழியப்பட்ட நிலையில், அதற்கான இழப்பீடுகள் முறையாக வழங்கப்படாதது, திட்டமிடல் குறைபாடுகள், கையகப்படுத்தலில் ஏற்பட்ட சிக்கல்கள், நிதி முறைகேடுகள் மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் வீரகேரளம், வடவள்ளி, வெள்ளக்கிணறு, தெலுங்குபாளையம், கவுண்டம்பாளையம், கணபதி, காளப்பட்டி, விளாங்குறிச்சி, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நில உரிமையாளர்கள், சிறு வீட்டு மனை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவரங்கள் உடனடியாக வருவாய் பதிவேடுகளில் பதிவு செய்யப்படாமல், பல ஆண்டுகள் கழித்து மட்டுமே அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் தங்களுக்குச் சொந்தமானதாக நம்பி நிலங்களை வாங்கி, வீடுகள் கட்டி குடியேறிய பின்னர் பிரச்னைகள் உருவாகியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பலர் தங்களது சொத்துக்களை விற்கவும், அதன் மீது கடன் பெறவும், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண தேவைகளுக்காக நிதி திரட்டவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாது.



மேலும், சிறு குறு விவசாயிகள் தங்களது சாகுபடிக்கான பயிர்க்கடன், மானிய விலையில் உரங்கள் மற்றும் அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற முடியாமல் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து கடந்த ஆட்சியில் மனுக்கள் பெறப்பட்டு, அதனை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற இரண்டு IAS அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும், அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சில வகை நிலங்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் மீதமுள்ள பலருக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

எனவே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நீண்டகால நில ஆர்ஜித பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வீடு கட்டி குடியிருப்போருக்கு எந்த கட்டணமும் இன்றி பட்டாக்கள் வழங்கி, அவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...