துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் கூடலூர் பேரூராட்சி ஆய்வாளரைக் கண்டித்து ஆட்சியரிடம் மனு

நீலகிரிக்கு உட்பட்ட கூடலூர் பேரூராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை ஆய்வாளர் பரசிவம் மற்றும் பிட்டர் மகாதேவன் ஆகியோர் தரகுறைவாக நடத்துவதாக துப்புரவு பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த 300 ரூபாய் கூலியை வழங்காமலும், பணியில் உள்ள துப்புரவாளர்களை உயிரிழந்துவிட்டதாகவும் பதிவேட்டில் ஆய்வாளர் பரமசிவம் பதிந்துள்ளார்.



இதனால், அவேசமடைந்த கூடலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துடைப்பம் மற்றும் சாக்கடை தூர் வாரும் பொருட்களுடன் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவினையும் துப்புரவு தொழிலாளர்கள் வழங்கினர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...