கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற்றது. கல்விக் குழுமத் தலைவர் Dr. ராச. வசந்தகுமார் தலைமை வகித்தார். மாணவர்களின் எதிர்கால திறன் மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. LTIMindtree நிறுவனப் பிரதிநிதி சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இளநிலை, முதலாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவர்களை வரவேற்கின்ற 'துளிர் 2026' வரவேற்பு விழா 02.07.2026, வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. புதிய கல்வி ஆண்டில் புதிய உத்வேகத்துடன் கல்வி பயணத்தைத் தொடங்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதலும் ஊக்கமும் அளிக்கும் விதமாக இவ்விழா அமைந்தது.



விழாவின் தொடக்கமாக கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் Dr. வீ. ராகவி வரவேற்புரையாற்றி, புதிய மாணவர்களை கற்பகம் குடும்பத்தில் அன்புடன் வரவேற்றார். கற்பகம் கல்விக் குழுமங்களின் தலைவர் Dr. ராச. வசந்தகுமார் விழாவிற்குத் தலைமை தாங்கினார். அவர் தமது உரையில், "மாணவர்கள் வள்ளுவத்தை வாழ்க்கைக்கு வழித்துணையாகக் கொண்டால், வளமான எதிர்காலம் அமையும். பண்பில் மேம்பட்டு, மனிதநேயம் சிறந்து வாழலாம்" என்று அறிவுறுத்தினார். தமிழ் இலக்கியத்தின் சாரத்தை நவீன கல்வியோடு இணைக்கும் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.



இவ்விழாவில் LTIMindtree நிறுவனத்தின் Business Solution Lead, நிறுவனத் தரவு மற்றும் பகுப்பாய்வு அதிகாரியான திருமதி ஐஸ்வர்யா நந்தகோபால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தொழில்துறை அனுபவமுள்ள நிபுணர் என்ற முறையில் அவர் வழங்கிய சிறப்புரை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. "மாணவர்கள், தங்களின் இலக்குகளை நோக்கித் துணிச்சலுடன் பயணிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டு, ஆளுமையில் சிறக்கவேண்டும். குறையாத ஆர்வமும், தெளிவான செயல் திட்டமும், நம்பிக்கையும், சமூகப் பொறுப்புணர்வும் கொண்டு வெற்றிபெற்று, நாட்டை உயர்த்த வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார். தொழில்துறை எதிர்பார்ப்புகளையும் வெற்றிக்கான வழிமுறைகளையும் அவர் விளக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து, துணைவேந்தர் Dr. இரவி உரையாற்றி, "கற்பகம் உயர்கல்விக்கழகம், மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறுவிதமான வாய்ப்புகளை வழங்கிவருகிறது. மாணவர்கள் அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் சிறக்க வேண்டும்" என்று மாணவர்களை வாழ்த்தினார். கல்விக்கழகத்தின் பல்துறை வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.

பல்கலைக்கழகப் பதிவாளர் Dr. பீ.வீ. பிரதீப், கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் சிறப்புகள், கட்டமைப்பு மற்றும் கல்விமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான அறிமுக உரையை வழங்கினார். நூலகம், ஆய்வகங்கள், விளையாட்டு வசதிகள், தங்குமிட வசதிகள் போன்ற பல்வேறு வசதிகள் குறித்தும், தேர்வு முறைகள், மதிப்பெண் முறைகள், முக்கிய விதிமுறைகள் குறித்தும் அவர் விளக்கினார். தேர்வாணையர் Dr. ப.பழனிவேலு முன்னிலை வகித்தார்.

நிகழ்வின் நிறைவாக, கணினி அறிவியல் துறை ஒருங்கிணைப்பாளர் Dr. இரா. குணசுந்தரி நன்றியுரை ஆற்றி, விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், இளநிலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...