கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சசிகுமார் (37) என்பவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் ராமகிருஷ்ணா வித்யாலயா அருகே உள்ளமேம்பாலம் ஏறும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

விபத்து குறித்து போலீசார் தெரிவித்ததாவது, கோவை அசோக் புரத்தைச் சேர்ந்த சசிகுமார் (37), பிரிகால் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை தனது காரில் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமகிருஷ்ணா வித்யாலயா மேம்பாலம் ஏறும் பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே அமைந்திருந்த தடுப்புச் சுவரில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், சசிகுமார் தலையில் பலத்த காயமடைந்தார். தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.



இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...