கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதன்படி, கோவை சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக (நிலம் எடுப்பு) இளங்கோவன், எம். பாண்டீஸ்வரன் மற்றும் கோவிந்தராஜு நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றவியல் (E.C.) நீதிமன்றத்திற்கு விஷ்ணு சித்தார்த், மகளிர் நீதிமன்றத்திற்கு அர்ச்சனா, 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு பிரேமலதா, 5-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு நிர்மலா, டான்பிட் (TNPID) நீதிமன்றத்திற்கு பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிவில் நீதிமன்றத்திற்கு கார்த்திகேயன், குற்றவியல் நீதிமன்றத்திற்கு பிரபு ஸ்ரீகாந்த், எஸ்.சி./எஸ்.டி. வழக்குகளுக்கான சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திற்கு முத்துக்குமார், கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு பாலமுருகன், முன்சிப் நீதிமன்ற அரசு வழக்குப் பணிகளுக்கு தமிழ்வாணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்திற்கு தன்ராஜ், பொள்ளாச்சி முன்சிப் நீதிமன்றத்திற்கு ரங்கராஜன், சூலூர் முன்சிப் நீதிமன்றத்திற்கு விஜய் ஆனந்த், மதுக்கரை முன்சிப் நீதிமன்றத்திற்கு விக்னேஷ், மேட்டுப்பாளையம் முன்சிப் நீதிமன்றத்திற்கு வினோத், மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்திற்கு நவீன் குமார் மற்றும் அன்னூர் முன்சிப் நீதிமன்றத்திற்கு லதா மங்கேஷ் ஆகியோர் தற்காலிக அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் (Public Prosecutor), அரசு வழக்கறிஞர் (Government Pleader), முதல் மற்றும் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்கள் ஆகிய பணியிடங்களுக்கு இதுவரை நியமனம் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நியமனங்கள், ஆறு மாத காலத்திற்கு அல்லது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு காலவரையறை அடிப்படையில் அரசு சட்ட அலுவலர்கள் நியமிக்கப்படும் வரை, இதில் எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை தற்காலிக அடிப்படையில் செல்லுபடியாகும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக நியமனங்கள் மூலம் நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வழக்குகள் தொடர்ந்து தடையின்றி நடத்தப்படுவதுடன், அரசு சார்பிலான சட்டப் பணிகளில் நிர்வாக ரீதியான இடையூறுகள் ஏற்படாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 6 ஆம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், 8 வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், மாவட்ட ஆட்சியருக்கு மொத்தம் ரூ. 62,000 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...