கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய சாட்சிகள் என்பதால் அரசு வேலை வழங்குவது வழக்கு விசாரணையை பாதிக்கக்கூடும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை: கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை த.வெ.க. தலைவர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜயின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இது திட்டமிட்டு நடந்த செயலா அல்லது விபத்தா என்பதற்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதுடன், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரும் முக்கிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கவும், அதற்கான ஆணையை விஜயே நேரடியாக வழங்கவும் நாளை (ஜூலை 10) கரூருக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த.வெ.க. சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய சாட்சிகளாக உள்ள அந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது. அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறிவிடலாம். அதனால் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போவதுடன், 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமலும் போய்விடும்.
"அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" என்றும், அரசு வேலை வழங்குவது நீதிமன்ற விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ள டாக்டர் க. கிருஷ்ணசாமி, கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...