கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம் உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் நேஷனல் சேம்பியன்சிப் போட்டிக்கான பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். புதிய உள் விளையாட்டு அரங்கங்களையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட R.S.புரம் மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தின் பராமரிப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயமுத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72-க்கு உட்பட்ட R.S.புரம் மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் நிறுவனத்தால் 16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் நேஷனல் சேம்பியன்சிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் இன்று (11.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் வார்டு எண் 39-க்கு உட்பட்ட மகாராணி அவென்யூ 5வது தெருவில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து குடியிருப்போர் நல சங்கத்துடன் கலந்துரையாடினார். பின்னர், வார்டு எண் 75-க்கு உட்பட்ட கிருஷ்ணம்பதி குளக்கரையில் நடைபெற்று வரும் ஆகாயத் தாமரை அகற்றும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், மத்திய மண்டலம் வார்டு எண் 83-க்கு உட்பட்ட நேரு உள் விளையாட்டு மைதானத்தின் எதிரே தலா ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து மற்றும் கபடி உள் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, உதவி ஆணையர் Narmatha, செயற்பொறியாளர் Yogasithra (பொ), உதவி செயற்பொறியாளர் Savitha, Saravanakumar (பொ), மண்டல சுகாதார அலுவலர் Radhakrishnan, உதவி பொறியாளர்கள் Manjuladevi, Babu (பொ), Sathish மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...