வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று மதியம் 2 மணி அளவில் மேலும் மூவரின் உடல்கள் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: வியட்நாமில் நடைபெற்ற படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஜூலை 19 ஆம் தேதி வியட்நாமில் ஏற்பட்ட படகு கவிழ்ப்பு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் சட்டப்பூர்வ நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டன.



முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, பாலாஜி மற்றும் அழகுராஜன் ஆகியோரின் உடல்கள் மும்பையிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தன. அங்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மரியாதை செலுத்திய பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.



தொடர்ந்து மதியம் 2 மணியளவில் மற்றொரு விமானத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஜெயவேல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பிரபு ஆறுமுகம் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் சுந்தரராஜன் ஆகியோரின் உடல்கள் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளன.

இதற்காக கோவை விமான நிலையத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். உடல்கள் வந்தடைந்ததும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, உறவினர்களின் முன்னிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த அழகுராஜனின் உடலைப் பெற கோவை விமான நிலைய சரக்கு முனையத்திற்கு வந்த அவரது நண்பர் வேல்முருகன், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.



மேலும், தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்த அழுகுராஜனின் வருமானத்தை நம்பியே அவரது கும்தும்பம் இருந்ததாகவும், எனவே அவரது குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு நிதியுதவியுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...