சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் அம்பலம்.


கோவை: ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் ஆன்லைன் மூலம் பணம் பறித்து வந்த இருவரை l கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த போலீசார், கோவையில் வசிக்கும் வடமாநில வியாபாரிகளின் செல்போன் எண்களை பெற்று, போலீசில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர்கள் தொடர்புகொண்டு வந்துள்ளனர்.

அவர்கள், "நீங்கள் ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளீர்கள். உங்களை கைது செய்து சிறையில் அடைப்பதுடன், உங்கள் புகைப்படத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவோம். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் அனுப்ப வேண்டும்" என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த பலர் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வடவள்ளி பி.என்.புதூரைச் சேர்ந்த பின்னி மற்றும் சரவணம்பட்டியைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட கிஷோர் குமார் மீது கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஏற்கனவே நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கும்பல் சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...