சங்கரா கண் மருத்துவமனையின் 40-வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்


கோவை, சரவணம்பட்டி, சிவானந்தா காலனி பகுதியில் செயல்பட்டு வரும் சங்கரா கண் மருத்துவமனையின் 40-வது ஆண்டு விழாவின் நினைவாக வரும் மே 21-ம் தேதியன்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்கும் "கேளடி கண்மணி" எனும் இசை நிகழ்ச்சி கோவை ஹிந்துஷ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுக்கு 9965511097 மற்றும் 9965511068 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது bookmyshow.com என்ற இணையதளத்தின் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஆர்.வி.ரமணி கூறியதாவது:-

சங்கரா கண் மருத்துவமனை கடந்த 1977-யில் டாக்டர் ஆர்.வி.ரமணி மற்றும் அவரது குழுவினரால் கோவை, ஆர்.எஸ்.புரம், காமாட்சியம்மன் கோவிலில் துவங்கப்பட்டது. பின் 1982-யில் காஞ்சி ஆச்சாரியரின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீ காஞ்சி காமகோடி மெடிக்கல் ட்ரஸ்ட் தொடங்கப்பட்டது.

1980-யில் இந்தியாவில் அதிக அளவில் பார்வைக் குறைபாடு நோய் இருந்தது. அந்த சமயத்தில் அதற்கு தீர்வுகான சங்கரா கண் மருத்துவமனை உருவாக்கப்பட்டது. 1985-யில் டாக்டர் ரமணியின் வழிகாட்டுதலிலும், குறிப்பாக டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியத்தின் பங்கேற்பாலும் மருத்துவ துறையில் கண் சிகிச்சைக்கென பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்தே சரவணம்பட்டி, சிவானந்தாகாலனி பகுதியில் சங்கரா கண் மருத்துவமனை துவங்கப்பட்டது. 

தற்போது கோவை, கிருஷ்ணன் கோவில், ஆந்திரா மாநிலம் குண்டூர், கர்நாடகா மாநிலம் பெங்களூர், ஷிமோகா, குஜராத்தில் ஆனந்த், பஞ்சாபில் லூதியானா, உத்திரபிரதேசத்தில் கான்புர் ஆகிய இடங்களில் சங்கரா கண் மருத்துவமனைகள் செயல்பட்ட வருகிறது. விரைவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர், மத்தியபிரதேசத்தின் இந்தூர், பான்வெல், தெலுங்கானாவின் ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் அதன் செயல்பாடுகள் துவங்கும்.

தற்போது மருத்துவர்கள், 1800 முழு நேர ஊழியர்களுடனும், தன்னார்வலர்களுடனும், தன்னார்வ அமைப்புகளுடனும் இணைந்து தனது சேவையினை சங்கரா கண் மருத்துவமனை செயலாற்றி வருகிறது" என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...