கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 17 நிலவரப்படி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து பெருகி வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.


Coimbatore: தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர்வரத்தால், ஜூலை 17 நிலவரப்படி நீர்மட்டம் 56.2 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 301 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 227 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.




பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஜூலை 17 தேதி நிலவரப்படி நீர்மட்டம் 19.28 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,172 கன அடி நீர்வரத்து பெருகி வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 810 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.




வால்பாறையில் அமைந்துள்ள சோலையாறு அணையின் மொத்த கொள்ளளவு 160 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர்வரத்தால், ஜூலை 17 நிலவரப்படி நீர்மட்டம் 91.92 அடியாக பதிவாகியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 811 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,355 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




தென்மேற்கு பருவமழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால், மாவட்டத்தின் முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது விவசாயிகளுக்கும், குடிநீர் தேவைக்கும் நல்ல செய்தியாக அமைந்துள்ளது.


Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...