கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி முற்போக்கு அமைப்புகள் காவல் ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தன.

கோவை: கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, அரசுக்குச் சொந்தமான பள்ளி மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற பயிற்சிகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி சி.பி.ஐ. (எம்.எல்.) உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தன.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ. (எம்.எல்.) மாநிலக் குழு உறுப்பினர் பெரோஸ், கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சிகள் நடத்தப்படுவதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றதாகக் கூறினார்.

அதன் விளைவாக, பொது இடங்களில் இதுபோன்ற பயிற்சிகளை நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்திருந்ததாகவும், தற்போது மீண்டும் அரசுப் பள்ளி மைதானங்களில் 'சாகா' பயிற்சிகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.



மேலும், இதுபோன்ற பயிற்சிகள் மாணவர்களிடையே மத மற்றும் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பள்ளி வளாகங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பொது இடங்கள் இதற்காக பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசு உடனடியாக தலையிட்டு, அரசுப் பள்ளி மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சிகள் நடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பெரோஸ் தெரிவித்தார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...