வேலைவாய்ப்பு அலுவலகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியினை இலவசமாக வழங்கி வருகிறது. பள்ளி இறுதி தேர்ச்சி, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்று வரும் மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு பயிற்சிக் காலம் முழுமைக்கும் தினம்தோறும் போக்குவரத்துப்படி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

இதன் தொடர்பாக விருப்பம் உள்ள மனுதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பயிற்சி பெற விரும்பும் திறன் பயிற்சி விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதில், பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பதிவு முகாம் வரும் மே 31ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.வேலைவாய்ப்பு அலுவலகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வேலைவாய்ப்பு பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சியினை இலவசமாக வழங்கி வருகிறது. பள்ளி இறுதி தேர்ச்சி, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்று வரும் மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு பயிற்சிக் காலம் முழுமைக்கும் தினம்தோறும் போக்குவரத்துப்படி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. 

இதன் தொடர்பாக விருப்பம் உள்ள மனுதாரர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பயிற்சி பெற விரும்பும் திறன் பயிற்சி விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதில், பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கென சிறப்பு திறன் பயிற்சி பதிவு முகாம் வரும் மே 31ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...