ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகளிர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கோவை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற வளர்ச்சித் திட்டங்களை சனிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.



மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையம், பொது கழிப்பிடம், வீடில்லா நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.



அதேபோல், வீரியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள், உடையாம்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மெய்நிகர் (AR & VR) ஆய்வகம் ஆகியவையும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.



வ.உ.சி. மைதானம் அருகே ரூ.196 லட்சத்தில் அமைக்கப்பட்ட கையுந்து (Volleyball) உள்விளையாட்டு அரங்கம், ரூ.5.15 கோடியில் கட்டப்பட்ட கபடி உள்விளையாட்டு அரங்கம், ரூ.96 லட்சம் மதிப்பிலான வுசூ (Wushu) உள்விளையாட்டு அரங்கம் மற்றும் தனியார் பங்களிப்பில் ரூ.1.50 கோடியில் உருவாக்கப்பட்ட இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வே.சம்பத்குமார், விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் உலகத் தரத்திலான உள்விளையாட்டு அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவற்றின் மூலம் மாணவர்கள் மற்றும் வீரர்கள் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலத்தில் மகளிர் பூங்கா, தெலுங்குபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் சுகுணாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மெய்நிகர் (AR & VR) ஆய்வகம் ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் காந்திபார்க் மற்றும் போத்தனூரில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையங்களையும் அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், துணை மேயர் ரா. வெற்றிசெல்வன், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...