நாளை துவங்குகிறது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய நான்கு மாநிலங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 690 சதுர கிலோமீட்டர் கொண்ட கோவை வனக்கோட்டத்தை 24 பகுதிகளாக பிரித்து இக்கணக்கெடுப்பு நடத்தப்படுமென மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 4 மாநிலங்களிலும் நாளை துவங்கிறது.

நாளை முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் வனக்கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில், யானைகள் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

அப்போது மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் யானைகள் கணக்கெடுப்பை மேற்கொள்வது குறித்து வனத்துறையினருக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கும் பயிற்சி அளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராமசுப்பிரமணியம், 690 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோவை வனக்கோட்டத்தை 24 பகுதிகளாக பிரித்து யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுமென தெரிவித்தார். முதல் நாளில் நேரடி கணக்கெடுப்பு, இரண்டாம் நாள் அறிவியல் பூர்வ கணக்கெடுப்பு, மூன்றாம் நாள் நீர்நிலை கண்காணிப்பு என 3 முறைகளில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதன் மூலம் யானைகளின் குடும்ப அமைப்பு, ஆண், பெண் யானைகள் விகிதாச்சாரம், குட்டி யானைகள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமெனவும், பயிற்சி வனவர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உட்பட சுமார் 100 பேர் பங்கேற்க உள்ளதாகவும் ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.

பருவ காலங்களுக்கு ஏற்ப யானைகள் இடம் பெயரும் தன்மை கொண்டதால் ஒரே நாளில் 4 மாநிலங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், இக்கணக்கெடுப்பு மூலம் யானைகளின் துல்லியமான கணக்கை அறிந்து கொள்ள முடியுமெனவும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...