இலவச கல்வி திட்டத்தை வெளி மாநில, பிற மாவட்ட பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு கூட்டம் அங்கேரிபாளையம் அருகில் ஆத்துப்பாளையத்தில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவரையும் சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரை வரவேற்றார். முன்னாள் வார்டு உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

அங்கன்வாடி ஆசிரியர்கள் எம்.கமல சரஸ்வதி, எஸ்.பிரியா, ஆத்துப்பாளையம் ஊர்த்தலைவர் கே.குருசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன் பேசும் போது, திருப்பூர் மாவட்டத்திற்கு தொழில் நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் திருப்பூருக்கு வசிக்க வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் அவர்களுடைய குழந்தைகளை முறையாக பள்ளிகளில் சேர்ப்பது இல்லை. சிறிது காலத்திற்கு பிறகு குழந்தைகளையும் வேலைக்கு அனுப்புகிறார்கள்.

இதை தடுத்து நிறுத்தி அவ்வாறு வேலைக்கு செல்லும் குழந்தைகளை சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து இலவச கல்வி அளிக்கும் பணியை தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் செய்து வருகிறோம்.

பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேலைக்கு செல்லும் குழந்தைகளை பற்றி 0422 - 2305445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அந்த குழந்தைகளை மீட்டு வந்து கல்வி அளிப்பதோடு குழந்தைகளை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழிற்கல்வி பயிற்றுனர் மீனா, தன்னார்வலர் பயிற்றுனர் சுப்புலட்சுமி உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முன்னாள் வார்டு கவுன்சிலர் எஸ்.செந்தில்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...