பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தனை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.


Coimbatore: கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தனை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம்போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அதே பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் மாணவிக்கு உதவுவது போல் நடித்து, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவியிடம் பாலியல் தொல்லை அளித்தது போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, காவலர் மணிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே, பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Des: பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தனை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...