கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆழியார் அணையில் 56.5 அடி நீர்மட்டமும், பரம்பிக்குளம் அணையில் 29.88 அடியும், சோலையாறு அணையில் 94.92 அடி நீர்மட்டமும் உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள இன்றைய (ஆகஸ்ட் 7) நிலவரப்படி, மூன்று அணைகளின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


ஆனைமலையை அடுத்துள்ள ஆழியார் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர்வரத்தால் இன்றைய நிலவரப்படி 56.5 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 379 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 29.88 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1913 கனஅடி நீர்வரத்து உள்ளது. வினாடிக்கு 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


வால்பாறை அருகேயுள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் அணையின் இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 94.92 அடியை எட்டியுள்ளது. மேலும் சோலையாறு அணைக்கு வினாடிக்கு 2734 கனஅடி நீர்வரத்து உள்ளது மற்றும் வினாடிக்கு 1630 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயரும் நிலையில் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை மாவட்டத்தின் விவசாய நலனுக்காக இந்த அணைகள் முக்கிய பங்காற்றுகின்றன. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்வதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் விவசாயிகளுக்கு போதுமான நீர்வசதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...