திருப்பூரில் பெண்ணை தாக்கிய டி.எஸ்.பி. மீது எந்த புகாரும் வரவில்லை- தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேகா ஷர்மா பேட்டி



தேசிய மகளிர் ஆணையத்தின் 'மகிளா ஜென் சுன்வைவ்' அமைப்பு நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த அமைப்பு நடத்தும் விசாரணை இரண்டு நாட்கள் கோவையில் நடைபெறுகிறது. இதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ரேகா ஷர்மா கோவை வந்தார். அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 5 மாதங்களாக 'மகிளா ஜன் சுன்வைவ்' அமைப்பானது பெண்களுக்கான வழக்குகளை விசாரிக்க இந்தியா முழுவதும் மாவட்டம் வாரியாக சென்று விசாரணை நடத்துகிறது. போலீசாரால் தீா்க்க முடியாத வழக்குகளை மகிளா ஜன் சுன்வைவ் அமைப்பு ஏற்று நடத்தி வருகிறது.

மேலும், வடமாநிலங்கள் உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களின் குற்ற எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் குற்ற எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தமிழக போலீசார் எங்கள் அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் விசாரணை மேற்கொண்டோம். அப்போது அங்கு 100 வழக்குகள் பதிவாகி இருந்தது. கோவையில் 40 வழக்குகள் மட்டுமே உள்ளது. 90 சதவிகித வழக்கு விசாரணை முடிவடைந்துவிட்டது.

இங்கு ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இதற்கு அண்டை மாவட்டத்தை சேர்ந்த 2 இடைநிலை காவலர்கள் உறுதுணையாக இருந்தனர். தொடர்ந்து, எங்கள் அமைப்பின் சார்பில் அவர்கள் மீதும் விசாரணை எடுக்க கமிஷன் அமைத்துள்ளோம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ள பெண்கள் புகார்களை அளிக்க முன்வர வேண்டும். திருப்பூரில் பெண்ணை தாக்கியதாக டி.எஸ்.பி. மீது எந்த புகாரும் எங்கள் அமைப்புக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...