சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீர்நிலைகளை தூர்வாருதல், அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்துதல், வனவிலங்குகளால் பயிர் சேதத்தைத் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளிடம் இருந்து தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் மனுக்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியும், குட்டைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் தடுப்பணைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வீரபாண்டிபுதூர் RVC நடராஜன் வரவேற்புரை வழங்கினார். கஸ்தூரி நாயக்கன்பாளையம் KNL ஓ துரைசாமி கருத்துரை வழங்கினார். சோமையனூர் ஆசிரியர் மாணிக்கம், சுந்தர்ராஜன், சோமசுந்தரம், காளையனூர் மனோகரன், வரப்பாளையம் ஜீவானந்தம், 24 வீரபாண்டிபுதூர் பவர் ராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் வேணுகோபால், சின்னதடாகம், தடாகம், 24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் மழைநீரை சேமித்து பயன்படுத்துவதற்கான நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகள் முறையாக பராமரிக்கப்படாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக அவர் கூறினார். மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்கும் வகையில் கிராமங்களில் உள்ள மழைநீர் சேமிப்பு குட்டைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் தடுப்பணைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள பவானிசாகர், காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியப் பகுதிகளை இணைத்து திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மழைக்காலங்களில் கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் செல்லும் உபரி நீரை பயன்படுத்தும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். வனப்பகுதிகளில் தேவையான குடிநீர் தொட்டிகளை அமைத்து, வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், கேரளாவில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் நடவடிக்கைகளைப் போன்று விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்க உரிய அனுமதிகள் வழங்க வேண்டும் என்றும் வேணுகோபால் தெரிவித்தார். வனப்பகுதிகளில் இருந்து வெளியே வரும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

வரும் 20-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சட்டசபை முற்றுகைப் போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கண்ணபிரான், பெருமாள் சாமி, துரைசாமி, சுப்பையன், சந்திரன், கார்த்தி, ராஜன், நேருராஜ், ஜெயா, ராம் லட்சுமணன், செல்வராஜ், கனகசுந்தரம், குமணன், வீராசாமி, பாரதி செல்வம் உள்ளிட்ட தடாகம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...