அரசு மாணவர் விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கு மே 20-யில் போட்டித் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற மே 20ம் தேதியன்று முற்பகல் மற்றும் பிற்பகல் என இருவேலைகளில் அரசு மாணவர் விடுதி கண்காப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.

கோவையில் 2 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ள இத்தேர்வினை 813 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வினை நடத்த 3 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு மொபைல் அலுவலர், 2 வீடியோ கிராபர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆய்வு அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தேர்வு அறைக்குள் மொபைல் போன் உள்ளிட்ட மின்னியக்க கருவிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...