கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவடைந்தது. கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் P. Thangadurai, IPS விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.


Coimbatore: கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ராகிங் எதிர்ப்புக் குழு மற்றும் NSS சார்பில் "ராகிங் எதிர்ப்பு வார விழா" ஆகஸ்ட் 12 முதல் 18 வரை கல்லூரி வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாணவர்களிடையே ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.




இதன் நிறைவு விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் Dr. P.L. Sivakumar தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் P. Thangadurai, IPS கலந்து கொண்டு ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.




இந்த நிகழ்வில் உரையாற்றிய P. Thangadurai, IPS, "ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் கடந்த 40 ஆண்டுகளாக ராகிங் தொடர்பான எந்த குற்றங்களும் நடக்கவில்லை என்பது பாராட்டுக்குரியது. ராகிங் எதிர்ப்பைப் போலவே மிகவும் முக்கியமானது போதைப்பொருளுக்கு எதிராக நாம் நிற்பது. ஒவ்வொருவரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.




அவர் மேலும் பேசுகையில், "கல்லூரியில் நீங்கள் படிக்கும்போது உங்கள் எதிர்கால வாழ்க்கையை சிறந்த முறையில் உருவாக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. மாணவர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக வலைதள குற்றங்கள் மற்றும் போதைப் பொருளுக்கு நாம் முழுவதுமாக விலகி இருக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.




அதைத் தொடர்ந்து கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் ராகிங் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் Dr. G. Senthil Kumar ராகிங் எதிர்ப்பு அறிக்கையை வாசித்தார்.




ஒரு வார காலமாக ராகிங் விழிப்புணர்வை முன்னிறுத்தி நடத்தப்பட்ட குறும்படம் தயாரித்தல், முக ஓவியம் தீட்டுதல், ராகிங்கிற்கு எதிரான வாசகம் எழுதுதல், ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.




நிகழ்வில் NSS ஒருங்கிணைப்பாளர் Dr. S. Pragadeeshwaran மற்றும் ராகிங் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...