பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர் அழைப்பு, நீலகிரி மற்றும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம், பிளாட்பாரம் நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.


Coimbatore: பீளமேடு ரயில் நிலையத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த கோரிக்கைகளை நிறைவேற்ற சேலம் ரயில்வே கோட்டம் ஒப்புக்கொண்டுள்ளது. சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் அழைப்பு, சென்னை-கோவை இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம், பிளாட்பாரம் நீட்டிப்பு ஆகியவை முக்கிய சாதனைகளாகும்.

பீளமேடு ரயில் நிலையத்தில் நீண்டகாலமாக கோரிக்கைகளை நிறைவேற்றாத சேலம் ரயில்வே கோட்டத்திற்கும், சர்வீஸ் ரோடு அமைக்க நிலம் கையகப்படுத்தாத மாவட்ட வருவாய்த்துறை கோட்ட பொறியாளர் NABARD துறைக்கும் எதிராக பீளமேடு, சேரன்மாநகர் மற்றும் காந்திமாநகர் பொதுமக்கள் 28.07.2026 அன்று கருப்புக்கொடியேற்றி போராட்டம் நடத்தினர்.


மேற்படி போராட்டத்தைத் தொடர்ந்து, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் போராட்டக் குழுவினருடன் பேச அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி 14.08.2026 அன்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal முன்னிலையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களான பூ.வெ.கோபால், P.K. தமிழ்வாணன், கோவை சந்திரன், நாராயணசாமி, R. பிரதிஷ் குமார், P. பாலன், P. பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.


இந்தப் பேச்சுவார்த்தையில் பல முக்கிய கோரிக்கைகள் ரயில்வே நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை (Subway) அமைப்பதற்கான டெண்டர் அழைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. நீண்டகால போராட்டத்தின் விளைவாக, சென்னை சென்று கோவை திரும்பும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பீளமேடு ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல கோட்ட மேலாளர் முதலில் நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த கொள்கையளவில் ரயில்வே துறை ஒப்புக்கொண்டது.


பீளமேடு பிளாட்பாரத்தை நீட்டிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைப்பதற்கு உள்ளேயும் வெளியேயும் வரும் சர்வீஸ் ரோடுக்கு 1994 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த வேண்டும். பாலம் கட்டுமானத்திற்கான மதிப்பீடு (Estimate) ஏற்கனவே அனுமதி பெறப்பட்டுள்ளது.


நிலம் கையகப்படுத்த ரயில்வே துறை சார்பில் 50 சதவீத தொகை வழங்க தயாராக இருப்பதாக கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 50 சதவீத தொகையை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தால் உடனே சர்வீஸ் ரோடு அமைக்க முடியும் என்று அவர் கூறினார். நிலம் கையகப்படுத்த தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், கோட்ட பொறியாளர் NABARD மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த கூட்டத்தை விரைவில் நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


பீளமேடு ரயில் நிலையத்தில் சுகாதாரக் கேடு ஏற்படுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும் கோட்ட மேலாளர் உறுதியளித்துள்ளார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...