கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று நடைபெற்றது. மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் Dr. சுமதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026 – தி கோல்டன் அவர் அண்ட் பியான்ட் ரேஸ் எகைன்ஸ்ட் டைம் இன் நியூரோ எமர்ஜென்சிஸ்" (பொன்னான நேரமும் அதற்கு அப்பாலும்: நரம்பியல் சார்ந்த அவசரநிலையில் சிகிச்சைக்கான துரித ஓட்டம்) என்ற தலைப்பிலான தேசிய மாநாடு ஆகஸ்ட் 21, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

Dr. சுமதி, இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை, கோயம்புத்தூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நோயாளிகளின் கருத்துகளை கவனமாகக் கேட்பது, அவர்களிடம் பரிவு மற்றும் அன்புடன் நடந்து கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கங்கா செவிலியர் கல்லூரியின் அறங்காவலர், ரமா ராஜசேகரன் வரவேற்புரை வழங்கி, மாநாடு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நியூரோ ஃபிராண்டியர்ஸ் - 2026 என்ற இந்த தேசிய மாநாடு அறிவு வளர்ச்சி, தொழில் முறை வலையமைப்பு, ஆராய்ச்சி பரிமாற்றம் மற்றும் நரம்பியல் அவசர நெறிகளுக்கான பல்துறை அணுகுமுறைகளை வலுப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது. மேலும் நரம்பியல் அவசர நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும் உயிரை காப்பாற்றும் என்ற முக்கிய செய்தியை வலியுறுத்தும் கல்வி நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.

தேசிய அளவில் நடைபெற்ற இந்த மாநாடு நரம்பியல் சார்ந்த செவிலியர் கல்வி மற்றும் சுகாதார ஆராய்ச்சி துறைகளில் புதிய சிந்தனைகளும் தரமான ஆராய்ச்சி நடைமுறைகளையும் உருவாக்கும், ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

இந்த தேசிய மாநாடு நரம்பியல் அவசர நிலைகளின் துரிதமான கண்டறிதல் மற்றும் மேலாண்மை தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் சுகாதாரத் துறை நிபுணர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியவர்களை கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...