கே.எம்.சி.எச் மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த 22 வயதுடைய இளம் வணிக ஆய்வாளர் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஓட்டப்பாலம், சுனங்காட் அஞ்சலை சேர்ந்த நவநீத் (22), இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இவர் விடுமுறைக்காக கடந்த 15-ஆம் தேதி பெங்களூரில் இருந்து பாலக்காட்டுக்கு அவரது வேலையை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருக்கும்பொழுது தர்மபுரி அருகே சாலையை கடந்த இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதில் நவநீத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது தந்தை சங்கரநாராயணன், அவரது மகன் நவநீத் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார்.

அவரது இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள்  கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கண்கள் அரவிந்த்  மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய நவநீத் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...