கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் பங்கேற்றனர். பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயசார்பு மற்றும் தலைமைப் பண்புகளை மேம்படுத்துவது குறித்து சிறப்புரைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் (Women Empowerment Cell) தொடக்க விழா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) காலை நடைபெற்றது. கல்லூரியின் IAS அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் M.R. எழிலி தலைமை வகித்தார். தனது உரையில், நவீன காலத்தில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். கல்லூரிகளில் இதுபோன்ற அமைப்புகள் செயல்படுவது மாணவிகளின் தலைமைப் பண்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.



தொடர்ந்து, கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை இணைப் பேராசிரியர் முனைவர் S. சித்ரா, பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கான பதவியேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக கோவையைச் சேர்ந்த Point Perfect Technology Solutions நிறுவனத்தின் HR மேலாளர் G.S. கிஷோர் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தனது உரையில், கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்த்துக்கொள்வதன் அவசியம் குறித்து அவர் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து முனைவர் ஏ. மாலதி மேம், பெண்கள் அதிகாரம் மற்றும் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். பெண்கள் எதிர்கொள்ளும் சமூகச் சவால்கள், அவற்றை எதிர்கொள்ளும் மன உறுதி, பொருளாதார சுதந்திரத்தின் அவசியம் மற்றும் பாலின சமத்துவம் குறித்து அவர் பேசினார். மாணவிகள் சுயமரியாதையுடனும் இலட்சியக் கனவுகளுடனும் தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவில், முதலாம் ஆண்டு கணினி அறிவியல் முதுகலை மாணவி பவி வர்ஷினி R நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் தொடக்க விழா நிறைவடைந்தது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...