கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த இளைஞரின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை அருகே நீலாம்பூரில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபரை கத்தியால் குத்தியதாகவும், அவர் உயிரிழந்த நிலையில் உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாகவும் அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக

கூறப்படுகிறது.

நீலாம்பூர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை வந்த அந்த நபர், கடந்த 22-ம் தேதி இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறின்போது அடையாளம் தெரியாத ஒருவரை கத்தியால் குத்தியதாகவும், இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தைச் சேர்ந்த சங்கரேஸ்வரன் (29) என்பதும், கோவை நீலாம்பூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

சங்கரேஸ்வரன் அளித்த தகவலின் அடிப்படையில், அவர் குறிப்பிட்ட இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது அவினாசி சாலையில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் சாலையோர பள்ளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கரேஸ்வரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த இளைஞர் யார், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...