‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அமைப்பினர் கண்டனப் பேரணி நடத்தினர். இதில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
‘கோவை: நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்வி சமத்துவம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ.) சார்பில் கோவையில் கண்டனப் பேரணி நடைபெற்றது.
காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, எஸ்.எப்.ஐ. அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம். சஜி மற்றும் டி.ஒய்.எப்.ஐ. மாநில துணைத்தலைவர் முகேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை (என்.டி.ஏ.) கலைக்க வேண்டும், சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோஷங்களை எழுப்பியபடி பேரணியாகச் சென்றனர்.
இதில் எஸ்.எப்.ஐ. மற்றும் டி.ஒய்.எப்.ஐ. அமைப்புகளின் கோவை மண்டல நிர்வாகிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எப்.ஐ. அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம். சஜி, ‘நீட்’ தேர்வு முறையில் நிலவும் குளறுபடிகள் மற்றும் அரசின் மெத்தனப் போக்கால் மாணவி அனிதா தற்கொலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறினார். அவர் கல்வி உரிமைக்கான தியாகி என்றும் தெரிவித்தார்.
தேசிய தேர்வு முகமை தற்போது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமைப்பாக மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தொடர்ச்சியான வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகவும், இதனால் ஏழை மற்றும் எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு பாதிக்கப்படுவதாகவும் ஆதர்ஷ் எம். சஜி குற்றம்சாட்டினார்.
ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், மறுபுறம் கல்வி தனியார்மயமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ‘நீட்’ தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் வரையிலும், தேசிய தேர்வு முகமை கலைக்கப்படும் வரையிலும் மாணவர்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.