வேலைவாய்ப்பு அலுவலகமும், ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் பெங்களூர் இணைந்து தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம்


கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் பெங்களூர் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை வரும் மே 25ம் தேதியன்று காலை 10 மணியளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்களுக்கு மட்டும் என சிறப்பு நேர்வாக நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் மனுதாரர்கள் வேலையளிப்பவருக்கு எவ்வித கட்டணமும் அளிக்கத் தேவையில்லை. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைதேடுவோர் பெருமளவில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...