வால்பாறை பகுதியில் கன மழை பெய்துவருவதால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் நிலவிவரும் கடுமையான வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது சமவெளிப் பகுதியைச் சார்ந்தவர்களே. 

கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் சமவெளிப்பகுதிகளில் சில மாதங்களாக மழை பொய்த்துப்போய் இருந்ததாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைபிரதேச பகுதிகளில் பெய்யும் மழை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்ததால் வால்பாறையில் உள்ள அனைத்து ஆறுகளும் வறண்டு காணப்பட்டன. வறட்சியின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வால்பாறையில் குறைந்து காணப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை முதல் வால்பாறைக்குட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வால்பாறை சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் மட்டுமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள சோலையாறு, சின்னக்கல்லார், நீரார் உள்ளிட்ட அணைகள் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...