பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU மற்றும் கோவை மத்திய மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் உக்கடத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம் மற்றும் கோவை மத்திய மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர். SDTU மாவட்டத் தலைவர் தாஜுதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், கார் டாக்ஸி சேவைகளை முறைப்படுத்த வேண்டும், அரசின் உரிய அனுமதியின்றி செயல்படும் டாக்ஸி செயலிகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மேலும், நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் பணப் பயன்களை அதிகரிக்க வேண்டும், அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் முறையை கைவிட வேண்டும், ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.



SDTU மாவட்டச் செயலாளர் என்.எம். கமருதீன் வரவேற்புரையாற்றினார். SDTU மற்றும் SDPI நிர்வாகிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...