கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச்சல் குளம் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும் நூலகம், பொதுக்கழிப்பிட கட்டுமானங்களையும் பார்வையிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சர்வதேச தரத்திலான நீச்சல் குளம் கட்டுமான பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை (09.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 83-க்கு உட்பட்ட வ.உ.சி. மைதானம் உயிரியல் பூங்கா வளாகத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அதே வளாகத்தில் ஸ்வச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுக் கழிப்பிடத்தையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை விரைவாக நிறைவு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மேயர் மத்திய மண்டலம் வார்டு எண் 83-க்கு உட்பட்ட ஆடிஸ் வீதியில் சீரமைவு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு இளைஞர்களுடன் கலந்துரையாடி, வருகைப் பதிவேடு, போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் குறித்து விசாரித்தார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் கணேசன், செயற்பொறியாளர் ஜெகன், செயற்பொறியாளர் (பொ) சரவண குமார், உதவி நகர திட்டமிடுநர் ஸ்ரீனிவாசன், மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் சதீஷ்குமார், நாகேந்திரன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...